பரதநாட்டிய நடன கலைஞரும் மாடல் அழகியமான அபிராமி வெங்கடாசலம் நோட்டா படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து களவு ,நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அபிராமியின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருந்ததால் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் .
அஜித்துடன் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் மக்கள் இடையே பிரபலமானார். கிட்டத்தட்ட 56 நாட்கள் இந்த பிக் பாஸ் வீட்டில் அபிராமி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ராக்கெட்ரி, துருவ நட்சத்திரம் போன்ற சில திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார்.
மேலும் பிக் பாஸ் அல்டிமேட் கட்சியிலும் கலந்து கொண்டு ஐந்தாவது ரன்னர் இடத்தை பெற்றார். இதனிடையே விளம்பர படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வரும் அபிராமி தற்போது சரியாக தனக்கு பட வாய்ப்பு இல்லை என்பதால் வேறு வழி இல்லாமல் சின்னத்திரை பக்கம் நுழைந்து இருக்கிறார்.
ஆம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீரா என்ற தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் அபிராமி நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்நிலையில் சீரியல் நடிகை ஆன பிறகு நடிகை அபிராமி சிம்பிளாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் சீரியல் நடிகையானதும் சிம்பிளா மாறிட்டிங்களே என கூறி வருகிறார்கள்.
View this post on Instagram