
சென்னை மாநகரில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் பகல் நேரங்களில் உயிருக்கு ஆபத்து என்றால் தெருநாய்களால் மற்றொருபுறம் வாகன ஓட்டிகள் சாலைகளில் நடந்து செல்பவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது இந்த நிலையில்..
பகலிலும் இரவு நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வளம் வரும் தெருநாய்கள் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களையும் வாகனங்களையும் கூட்டமாக துரத்துவது சென்னை மாநகர தெருக்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளது, குறிப்பாக அதிகாலை நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி மேற்கொள்ளுவோர் இரவு வேலை முடித்து வீடு திரும்பவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்பவர், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், முதியோர் என தெருநாய்கள் பயமுறுத்தாதவர்கள் பாக்கி இல்லை காலை நேரத்தில் வாக்கிங் செல்லக்கூட முடிவதில்லை என்று மக்கள் பெரிதும் ஆதங்கப்பட்டும் பயமுற்றும் இருக்கின்ற நிலையில், மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நாயிடமிருந்து தப்பிக்கவும் அதே நேரத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும் எண்ணி பதற்றம் அடைந்து கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் திரண்டு கதைகளாகின்றன, இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் கடுமையான சட்டங்கள் காரணமாக நாய்களை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது, சென்னை பொறுத்த வரை 34,640 சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன சென்னையில் 2018 ஆண்டு தெருநாய்கள் கணக்கிடும் பணி நடைபெற்றது அப்போது 59 ஆயிரம் நாய்கள் இருந்தன ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்றது அதன்படி சென்னை மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கீடு கணக்கெடுப்பின்படி ஒரு 1,81,347 தெரு தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது, மேலும் நாய்கள் பிரச்சனை குறித்து தினமும் மாநகராட்சிக்கு ஆன்லைன் மூலமாகவும் தொலைபேசி வாயிலாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன, மாநகராட்சியும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று நாய்களைப் பிடித்து செல்கின்றனர் ஆனால் நாய்கள் பிரச்சனைக்கு ஒரு முடிவு இல்லாமல் உள்ளது, இதற்காக சென்னை மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சியில் இருக்கும் 15 மண்டலங்களுக்கு தனித்தனி குழுக்கள் அமைத்து சென்னையில் இருக்கும் இன கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடை உதவி மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது இந்த சிகிச்சைக்கு பின்னர் நாய்கள் மீண்டும் அதே பகுதியில் இடப்படுகின்றன ஆனால் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் மூன்று மடங்கில் 19 கோடியில் நாய் கருத்தடை மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது, மேலும் 2023 ஆம் ஆண்டில் 1485 கருத்தடை மையம் சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன இதில் 80 பணியாளர்கள் அதாவது ஒரு வண்டிக்கு ஐந்து நபர்கள் என்ற கணக்கில் உள்ளனர் சென்னையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டுமே 15 ஆயிரம் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளன இதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்ட 14,85 ஆயிரத்து நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது 2024 ஆம் ஆண்டில் தற்போது வரை 967 நாய்கள் பிடிக்கப்பட்டு 696 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது..!!