புதிய குற்றவியல் சட்டங்கள் என்றிலிருந்து நடைமுறைக்கு வரும்..? மத்திய அமைச்சர் விளக்கம்..!!

நேற்றைய தினம் சென்னை வேலூர் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் நடைபெற்ற ஒரு நாள் மாநாட்டிற்குசட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் புதிய அரசியலமைப்பு சட்டம் வெளியிடுவது குறித்து இம்மாநாட்டில் பேசியுள்ளார்.

நேற்றைய தினம் சென்னை வேலூர் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் மத்திய சட்டம் மற்றும் நிதித்துறை அமைச்சகத்தின் சட்ட விவரங்கள் துறை சார்பில் “குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை” என்கின்ற கருப்பொருளில் ஒரு நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறியிருப்பது “நமது சட்ட அமைப்பு காலனி ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக கூறியுள்ளார். தற்பொழுது நாட்டின் சரியான சட்ட முறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் இந்தியாவின் நெறிமுறைகள் மற்றும் சமூக எதார்த்தங்களை புறக்கணித்துள்ளது.

அந்த சட்டங்கள் காலனித்துவ ஆட்சியாளர்களின் தேவைகளை முன்னெடுத்து செல்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும், நான்கு ஆண்டு ஆய்வுகள் விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்கு பின் உருவாக்கப்பட்டுள்ளது. காலனித்துவ பாரம்பரியத்தின் அனைத்து தடயங்களும் அகற்றப்பட்டுள்ளது. நவீன குற்றவியல் நீதி அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த மூன்று சட்டங்களும் நவீன குற்றவியல் நீதி அமைப்பை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் திட்டமிட்டபடி வருகின்ற 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்”, என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனை..!!

Read Next

மீண்டும் நான்காவது முறையாக அறுந்து விழுந்த நெல்லையப்பர் தேரின் வடம்..!! பக்தர்கள் குமுறல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular