புதிய குற்றவியல் சட்டங்கள் – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. பெயர்களை புரிந்து கொள்வதில் மட்டுமல்லாமல், உச்சரிக்கவும் முடியவில்லை என காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி ஜீவன்குமார், மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.