புதிய தொடரில் களமிறங்கும் நடிகை ரேஷ்மா..!! எந்த தொலைக்காட்சி, யாருக்கு ஜோடியாக தெரியுமா.?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பூவே பூச்சூடவா” என்கின்ற தொடரின் மூலம் சின்னத்திரை தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

அவரின் முதல் தொடரே ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அபி டெய்லர்”  என்ற தொடரிலும் அவர் நடித்துள்ளார். பின்னர் விஜய் டிவியில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய ரோலில் நடித்த “கிழக்கு வாசல்” என்ற தொடரிலும் நடித்துள்ளார். ஆனால் அந்த சீரியல் தொடங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகை ரேஷ்மா எந்த தொடரில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகை ரேஷ்மா ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் ஒன்றில் நடிகர் ஜெய் ஆகாஷ் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். ஆனால் அந்த சீரியல் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

https://www.instagram.com/p/C7L99SWRDd9/?utm_source=ig_embed&ig_rid=cf0c3257-4d6c-4a98-9a19-a3520025ca55

Read Previous

உணவை நீங்கள் அலுமினிய பாத்திரத்தில் சமைக்கிறீங்களா? ஆபத்து வேண்டாமே.!!

Read Next

சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு..!! படக்குழு அறிவிப்பு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular