தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான அஞ்சலி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.
முதல் படமே அவருக்கு ஏகோபித்த வரவேற்பை கொடுத்தது மட்டுமே இல்லாமல் சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். அதை அடுத்து 2019 அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்து மிகச் சிறந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்து இழுத்தார்.
இந்த திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது அவருக்கு கொடுத்து கவுரவிக்கப்பட்டது. அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டை சுழி, துங்கா நகரம், கலகலப்பு,சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, தரமணி, பலூன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
இதனிடையே இவர் ஜெய் உடன் சில வருடம் லிவிங் லைப்பில் வாழ்ந்து வந்தார். பின்னர் அவரை பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார் இதனிடையே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது புதிய ஆண் நண்பர் எனக்கூறி கட்டி அணைத்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அஞ்சலி வளர்க்கும் செல்ல நாய் குட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram