புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு முன்னால் முதல்வர் மாயாவதி ஆதரவு..!! எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்..!!

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வருகின்ற 28ஆம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலினை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மறுக்கப்பட்டது, காங்கிரஸ் ,திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ,சம்வாஜி உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

அதேபோல இந்த நிகழ்ச்சியை ஆந்திர முதலமைச்சர் நவீன் பட்நாயக், மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவினை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மே 28ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை வரவேற்று திறப்பு விழாவிற்காக அழைப்பு பெற்றதாகவும், ஆனால் தன்னால் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

அவர் கட்சியின் ஆய்வுக் கூட்டங்கள்  நடைபெற உள்ளதால் அதில் பங்கேற்க முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தெரிவித்திருந்தார். மேலும் “பழங்குடி பெண்களின் மரியாதை உடன் இதை இணைப்பது நியாயம் அற்றது குடியரசுத் தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அவருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தும்போதே இதைப்பற்றி எதிர்க்கட்சிகள் யோசித்து இருக்க வேண்டும்”, என்றும் கூறியுள்ளார்.

Read Previous

5 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய மும்பை வீரர்..!! கும்ப்ளேவின் சாதனை சமன் செய்தார் மும்பை வீரர்..!!

Read Next

மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular