சென்னை அடையாறு எல்.பி.சாலையில் மாநகரப் பேருந்து எரிந்ததாக செய்திகள் வந்துள்ளன. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவள் தனது எக்ஸ் பதிவில், திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாதது குறித்தும், முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்கும் பழுதடைந்த பேருந்துகள் குறித்தும் தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இதுபோன்று மக்கள் உயிருக்கே ஆபத்தான விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அரசுப்பேருந்துகளில் நம்பி பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளுக்கு தர ஆய்வு நடத்தியும், புதிய பேருந்துகளை இனியாவது கொள்முதல் செய்தும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யுமாறு முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.