புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு இந்த மாதம் முதல் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய ரேஷன் அட்டை:
எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே குடும்பத்தலைவரின் கைரேகை பதிவு இருந்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். தற்போது ரேஷன் கார்டு வேண்டும் என பலர் விண்ணப்பித்து வருகின்றனர். புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தவர்கள் என பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு இந்த மாதம் முதல் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் அட்டை பெற்றவுடன் தகுதியானவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பேர் இருந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் 1.48 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டதும் பயனாளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.