தமிழகத்தில் ஏற்கெனவே 2.24 கோடி ரேஷன் கார்டுகள் செயல் பாட்டில் உள்ளன. தேர்தலுக்கு முன் 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு மேலாக பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ருபாய் வழங்கும் திட்டம் கொண்டு வந்ததிலிருந்தே புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பல குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்ய தொடங்கினர்.
பல பேர் ஒரே குடும்பத்தில் இருந்து 2 ரேஷன் கார்டுகளை பதிவு செய்து வந்தனர். அதாவது, அவர்கள் பெற்றோர்கள் பெயரில் ஒரு அட்டையும், மகன் – மருமகள் என்ற பெயரில் மற்றொரு அட்டையும் பதிவு செய்து வந்ததால், அரசு அதிகாரிகள் அவரவர் வீட்டிற்கே சென்று ஒரே வீட்டில் இருக்கிறார்களா, அவர்களுக்கு ஒரு சிலிண்டர் உள்ளதா அல்லது இரண்டு சிலிண்டர்கள் உள்ளதா, மற்றும் அது யார் பெயரில் உள்ளது என்று தகவல்கள் சரிபார்த்த பின்னரே அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் காரணமாக ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் புதியதாக ரேஷன் கார்டுகளை பதிவு செய்த 2 லட்சம் பேருக்கு இந்த ஆகஸ்ட் மாதமே விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.