
புதிய ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கும் மீன்பிடி தடைகால சலுகைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீன்பிடி தடை காலத்தில் நிவாரணத் தொகையாக ரூபாய் 8000 வழங்கப்படுகிறது. இதற்கு முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபவராகவும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படாமல் இருந்த நிலையில் இனி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.