புதிய ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் புகார்..!! அதிகாரிகள் விளக்கம்..!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் தற்போது ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர் இது குறித்து தற்போது உணவு வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.

ரேஷன் கார்டு:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பு ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 7 & 17ஆம் தேதி இரு கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் சுமார் 74 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக வாக்கு எண்ணிக்கை விரைவில் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் ரேஷன் கார்டு விநியோகம் தொடர்பாக மக்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பேசிய பேசிய உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டுகளில் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இதனை விநியோகிக்க முடியாது. அனைத்து பணிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Read Previous

நேரலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!!

Read Next

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular