
தெலுங்கானா அடிலாபாத் பால் கொண்டவை பகுதியை சார்ந்தவர் சவுகான், இவரது மகள் தீபாவுக்கும் அடிலாபா புறநகர் பகுதியான பங்கடாவை பகுதியை சார்ந்த அருண் என்பவருக்கும் கடந்த மே மாதம் 11 தேதி திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணம் நடந்து ஒரு வாரத்திலேயே அருண் மனைவியின் நடத்தியின் மீது சந்தேகம் கொண்டு அவரை அடித்து துன்புறுத்து உள்ளார். இது தொடர்பாக தீபா தனது பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளார், அதற்கு அவரது பெற்றோர் திருமணமாகி புதிதில் இதுபோன்றுதான் இருக்கும் சிறிது நாள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அருண் தொடர்ந்து தீபாவை துன்புறுத்திக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தீபா தன்னை வீட்டிற்குள் அழைத்துச் செல்லுமாறு தந்தையிடம் செல்போனில் கூறியுள்ளார்.
மகள் வீட்டிற்கு கடந்த 15 நாட்களுக்குப் முன்பு வந்த பெற்றோர் தீபாவை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின் அருண் தீபாவின் அப்பாவிற்கு போன் செய்து அவரது பெற்றோரிடம் இனிமேல் தகராறு செய்ய மாட்டேன் என்று தெரிவித்து தீபாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அழைத்து வந்த முதல் நாள் அருண் மீண்டும் தகராறு செய்ய தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அருண் தீபாவின் தலையை சுவற்றில் மோதியதால் அவரது தலைப்பகுதியில் படுகாயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத அருண் கத்தியை எடுத்து வந்து தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைய சென்றார். அப்போது அருணின் தந்தை அவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதில் அருண் மனைவியை கொலை செய்து விட்டதாகவும் இதனால் தானாகவே காவல் நிலையத்தில் சரண் அடைய செல்வதாகவும் தெரிவித்துள்ளார். உடனே அருணின் தந்தை வீட்டிற்கு வருமாறு தெரிவித்ததால் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது இவருக்கு முன்னால் சென்ற லாரியின் மீது அருண் இருசக்கர வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபாய் உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கணவன் மனைவி இரண்டு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்ய தூண்டிய அருணின் பெற்றோரை கைது செய்தனர். கொடூரமான முறையில் மனைவியை கொலை செய்த கணவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.