
குழந்தை நட்சத்திரமாய் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை, சரவணா, ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பத்து தலை படத்தை முடித்துவிட்டு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கம் புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த படத்தினை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படம் குறித்தான டீசர் கிளிக்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது.
ஒரு சரித்திர கதையாக உருவாகி வரும் இந்த படத்திற்காக நடிகர் தலை முடியை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சிம்புவின் புதுத்தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டே வருகிறது. அதாவது நடிகர் சிம்பு மலேசியாவில் நடந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக சென்றபோது, ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.
இது மட்டுமின்றி நடிகர் சிம்பு அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், மேடையில் பாடலும் பாடியிருக்கிறார். அந்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டே வருகிறது.