தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தற்போது மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் வாக்குறுதி அளித்தப்படி பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளும் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சட்டசபை தேர்தலில் பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தகுதியான அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கான தகுதி அடிப்படைகள் வெளியாகி உள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் ரேஷன் கார்டு பெற வருடாந்திர வருமான வரம்பு ரூ. 2 லட்சமும் , கிராமப்புறங்களில் ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.