காலங்காலமாய் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்னும் பலரிடம் உள்ளது சற்று திரும்பி பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து கொண்டு தான் வருகிறது, புத்தகம் புத்தகமாக தான் இருக்கும் ஆனால் அந்த புத்தகத்தை வாசிப்பவன் புத்தனாகவும் மனிதனாகவும் மாமனிதனாகவும் வரலாறு படைத்து சாதனை புரிகிறான்.
அப்படி இருக்கையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் புத்தகம் வாசிப்பதனால் உடல் புத்துணர்ச்சியாகும், உடல் ஆரோக்கியமாகவும், ஆயுள் நீடிக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, வாரத்தில் மூன்றரை மணி நேரம் புத்தகம் வாசிப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் அதிகமாய் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஆயுள் குறைவாகவும் மன அழுத்தம், மனசோர்வு, என உடலில் பல நோய்கள் உண்டு பண்ணும் என்று அந்த அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது, முடிந்தவரை மட்டுமல்லாமல் மூச்சுக்காற்று உலகில் இருக்கும் வரையும் புத்தகம் வாசியுங்கள் புத்தகம் இல்லை என்றால் இந்த உலகில் புதுப்புது மாற்றங்கள் நிகழப் போவதில்லை புத்தகமே சிறந்த அச்சாணி மனிதனின் வாழ்விற்கு..!!