
ஜாதகத்தில் புதனின் நிலை சுகமாக இருக்கும்போது ஒருவரது முடிவெடுக்கும் திறன் வலுவாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஜோதிட கணக்கின்படி வரும் டிசம்பர் 12ஆம் தேதி காலை 6 : 12 மணிக்கு விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கை கூடும்..
ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள ஒன்பது கிரகணங்களுக்குள் புதன் கிரகமானது புத்திசாலித்தனம் அறிவு பேச்சாற்றல் தகவல் தொடர்பு ஆகியவற்றின் அதிபதியாக திகழ்கிறது. அதன் செல்வாக்கு ஒரு நபரின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. புதனின் நிலை சுபமாக இருக்கும் போது ஒருவரது முடிவெடுக்கும் திறன் வலுவாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஜோதிட கணக்கீடுகளின் படி இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கை அற்புதமாக மாறும்..
சிம்மம் : புதனின் உதயம் சிம்ம ராசியினருக்கு அதிக நன்மை பயக்கும் பணியிடத்தில் பதிவு உயர்வு கிடைக்கும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் திடீரென்று பணம் வந்து சேரும் புதனின் உதயத்தால் வியாபாரத்தில் நடக்கும் அனைத்தும் பிரச்சினைகளும் நீங்கும்..
மகரம் : மகர ராசியினருக்கு இது பணம் சம்பாதிக்க உகந்த நேரம் ஆக இருக்கும் திறமையை நிரூபிக்க ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். செல்வம் பெருகும் இந்த நேரத்தில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். இந்த காலத்தில் திருமண தடைகளும் நீங்கும் பிள்ளைகள் தொடர்பான கவலைகளும் நீங்கும். வியாபாரம் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை பெறுவார்கள் வாகனம் வாங்கும் வாய்ப்பு வலுவாக இருக்கும்..
கும்பம் : இந்த நேரம் கும்ப ராசியினருக்கு சாதகமாக இருக்கும் புதிய ஆண்டிற்குள் நுழைவதற்கு முன் தொழில் விரும்பிய முடிவுகள் எட்டப்படும் உறவுகளில் அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும் புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புகள் அமையும் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் குறித்த நேரத்தில் வேலை முடிவடையும் திருமண யோகம் கைகூடலாம் மூதாதையர் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்..!!