2025 புத்தாண்டையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் கடந்த ஞாயிறு (29-12-2024) அன்று நடைபெற்றது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதுகாப்பான மற்றும் விபத்தில்லா வகையில் கொண்டாடுவதை உறுதி செய்வதற்காக, “மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளை டிசம்பர் 31,2024 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1, 2025 ஆம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்” என பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்களும் மூடப்படுகிறது. இந்த நடவடிக்கையானது அதிக அளவிலான கூட்டத்தை நிர்வகிக்கவும், பண்டிகைகளின் போது சாலை பாதுகாப்பை பராமரிக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.