• September 29, 2023

புனிதமாக கருதப்படும் துளசி பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

துளசி பரிகாரம்… பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த துளசி, மருத்துவ குணங்கள் மட்டும் நிறைந்ததல்ல, ஜோதிடத்திலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. துளசிச் செடி மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலானவர்களின் வீடுகளிலும் துளசி செடி வளர்க்கப்படும். இந்து மத நம்பிக்கையின்படி, துளசிச் செடியை தினமும் வழிபடுவதும், அதற்குத் தண்ணீர் விடுவதும் மங்கல செயலாகக் கருதப்படுகிறது.

வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்ப்பதால் நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பது ஸ்ரீமகாலட்சுமியை மகிழ்விப்பதாக ஐதீகம். ஆனாலும், துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதற்கு வாஸ்து மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
தினமும் காலையில் துளசிச் செடிக்கு தண்ணீர் விட்டு, விளக்கேற்றி பூஜை செய்வது புனிதச் செயலாகக் கருதப்படுகிறது. அதேசமயம், துளசி இலைகள் மட்டுமல்ல, அதன் மஞ்சரி, தண்டு மற்றும் வேர்கள் கூட பல்வேறு பலன்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், மகிழ்ச்சியான வாழ்க்கையை துளசிச் செடி குறித்து சில எளிய பரிகாரங்களைக் காணலாம்.

துளசி இலை பரிகாரம்: நீண்ட காலப் பிரச்னைகள் வீட்டில் இருந்தால், நான்கைந்து துளசி இலைகளைக் கழுவி சுத்தம் செய்து, அதனை ஒரு பித்தளை பானையில் சுத்தமான தண்ணீரில் அந்தத் துளசி இலைகளை இடவும். தினமும் காலை குளித்த பிறகு அந்த நீரை வீட்டு வாசலில் தெளித்து வந்தால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துளசி மஞ்சரி பரிகாரம்: துளசி செடியில் மஞ்சரி இருப்பது ஐஸ்வர்யம். மகாவிஷ்ணுவுக்கு துளசி இலைகளுடன் துளசி மஞ்சரியையும் சமர்ப்பிப்பதன் மூலம், நீண்ட காலமாக வராமல் இருந்த தொகை வந்து சேரும்.

மேலும், வருமானமும் கூடும். கங்கை நீரில் துளசி இலைகளை கலந்து வீட்டின் வடக்கு திசையில் வைத்து, அந்த நீரை தொடர்ந்து தினமும் வீடு முழுவதும் தெளித்து வர, எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும்.

துளசிச் செடி பரிகாரம்: துளசிச் செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றி வந்தால், வாழ்வில் உள்ள பிரச்னைகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். அமாவாசையன்று குளிர்ந்த தண்ணீரில் துளசி மரத்துண்டை போட்டு சிறிது நேரம் கழித்து, அந்த மரத்துண்டை வெளியே எடுத்து ஒரு சுத்தமான இடத்தில் வைத்துவிட்டு, இந்தத் தண்ணீரில் நீராடவும்.

Read Previous

சமையலறை சிம்னியை சுத்தம் செய்ய சில யோசனைகள் உங்களுக்காக..!!

Read Next

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular