
தமிழ் சினிமா உலகில் புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் அன்பாய் அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் மார்க்கெட் நன்றாக இருந்தபோதே நடிகர் பிரசன்னாவை காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். 42 வயதுடைய சினேகா தற்பொழுது நல்ல அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகின்றார். தற்பொழுது விஜயின் “கோட்” படத்திலும் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் தனக்கும் சினேகாவுக்கும் படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்து உள்ளார்.
கல்லூரி நண்பர்களுக்கு இடையேயான நிகழ்வுகளை கதைக்களமாக கொண்ட “ஏப்ரல் மாதத்தில்” என்ற திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சினேகா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். திரைப்படத்தில் நடித்த போது தான் இருவருக்கும் விபத்து ஏற்பட்டது என்றும் அதை தன்னால் எப்போதுமே மறக்க முடியாது என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய சினேகாவின் முதுகெலும்பு உடையும் நிலையில் இருந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இருவரும் ஒன்றாக விபத்தில் சிக்கினாலும் தனித்தனியாக வேறு வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இருவருக்கும் உடல்நிலை தேறிய பின்னரே அந்த படத்தை முடித்து கொடுத்ததாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
நண்பர்களாக இருக்கும் ஸ்ரீகாந்தும் ,சினேகாவும் எப்படி காதலர்களாக மாறுகின்றனர்..? அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா..? என்பது தான் “ஏப்ரல் மாதத்தில்” படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.