தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக்., 25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும். இதனால் இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.




