புயல் வெள்ளத்தை கடந்து வீட்டிற்கு திரும்பும் சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சி..!! நகை, பணங்கள் கொள்ளை.!!

சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாங் புயல் வெள்ளமானது தற்பொழுது நகரில் இருந்து வெளியேறியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் இராட்சத பம்புகள் கொண்டு வெளியேற்றப்பட்டுள்ளது, வெள்ளம் தேங்கியிருந்த குடியிருப்புகளில் இருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த மக்கள் குடியிருப்பில் இருந்து வெளியேறி இருந்தனர். இதனால் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களும் நடைபெற்றது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அங்கு இருந்த மக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு தங்களின் உறவினர் வீடுகளுக்கும், முகாம்களுக்கும் குடி பெயர்ந்து சென்றனர். இந்நிலையில் வெள்ளம் வடிந்த பின் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவை திருடு போய் இருப்பது உறுதியாக்கப்பட்டது.

விசாரணையில் மொத்தமாக அடுக்கு குடியிருப்பு வளாகத்தில் இருந்த ஆறு வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் இருந்த ரூபாய் 3 லட்சம் ரொக்கம் 60 சவரன் நகைகள் திருடப்பட்டதும் தெரிய வந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

இரண்டாவது திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் டார்கெட்,,!! ஒரேநாளில் 7 பெண்களை ஏமாற்றிய மன்மத இளைஞன் கைது., மாவுக்கட்டு.!!

Read Next

நிவாரண பொருட்களை வாங்கச்சென்ற 14 வயது சிறுமி யுவஸ்ரீ, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாப பலி..!! சென்னை வெள்ளத்தால் நடந்த சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular