புரட்டாசி பிரதோஷம்..!! கஷ்டங்கள் தீர இந்த தீபம் ஏற்றுங்கள்..!!
சிவபெருமானுக்கு வில்வ இலை மட்டுமில்லாமல், மாதுளை இலையும், தும்பை இலையும் பிடித்தமான இலைகளாகும். இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதை இறைவன் விரும்புகிறார். மேலும் அகல் விளக்கில் தும்ப இலையை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி “ஓம் சோமேஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபாடு நடத்தினால் தீராத கஷ்டங்கள் தீரும். வழிபாடு முடிந்த பின்னர் பசு மாட்டிற்கு வாழைப்பழமும், பறவைகளுக்கு அரிசியும் உணவாக அளிக்கலாம்.