புரிதலும்.. விட்டுக் கொடுத்தாலும் கணவன் மனைவிக்குள் அவசியம் இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் பதிவு..!! கண்டிப்பா படிங்க..!!

கணவன் – மனைவி

தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி…
“நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி……..

“அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

“வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

” தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். “உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. ” நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

“உடனே அவள் ‘இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்……

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்………

அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது ” அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

“சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, “நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக்கொண்டுவருகிறாயஎன்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். ” ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்………

*புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை*

 

Read Previous

வடிகட்டிய தேயிலைகளை தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்தி பாருங்கள்..!!!

Read Next

கணவன்மார்கள் கண்டிப்பாக தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான பதிவு..!! புரிஞ்சு நடந்துக்கோங்க கணவன்மார்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular