புற்றுநோயால் மூக்கை இழந்த பெண்மணி..!! அலட்சியத்தால் விளைந்த சோகம்.!!

இங்கிலாந்து நாட்டை சார்ந்த பெண்மணி லீசா மெர்சன் (வயது 44). இவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வந்த நிலையில் இவருக்கு திடீரென்று தனது மூக்கின் சுவாசத்தை இழந்து உள்ளார்.

மேலும் அழுகிய நிலையிலான துர்நாற்றம் வீசுவது போல உணர்ந்து உள்ளார், உடல்நிலை சரியில்லாமல் இவ்வாறு நடக்கலாம் என்று முதலில் அலட்சியமாக இருந்த அந்த பெண்மணி நாளடைவில் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அனுமதியானர்.

அப்பொழுது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததால் அவரது மூக்கில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூக்கை அகற்றி உள்ளனர். இதனால் பெண்மணி மூக்கு இல்லாமல் தோற்றமளிக்கும் சோகம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் மூக்கு பகுதியில் ஏற்படும் புற்றுநோய் என்பது மிகவும் அரிதானது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இதனை முதலிலேயே கண்டறிந்தால் அப்போதே சரி செய்ய வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Read Previous

வீதியில் சண்டையிட்டு தம்பதி நடத்திய துப்பாக்கிசூடில் சிக்கி, 4 வயது சிறுவன் பரிதாப பலி..!! நொடியில் பெற்றோர் கண்மண் சோகம்.!!

Read Next

சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்வது கட்டாயமில்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular