திராட்சைகள் இரண்டு வகைப்படும் அவற்றில் ஒன்று கருப்பு திராட்சை. உலர்ந்த கருப்பு திராட்சையினால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த பதிவில் பார்ப்போமா?. உலர்ந்த கருப்பு திராட்சில் அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் இருந்து நமக்கு தீர்வு கிடைக்கும்.
தினசரி இந்த உலர் திராட்சை சாப்பிடுவதால் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கெட்ட பாக்டர்களின் எண்ணிக்கை குறையும். இதன் மூலம் செரிமான கோளாறுகள் ஆன வாயு நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் சரி செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் திராட்சையில் உள்ள அமிலம், அலர்ஜி தொடர்ப்பான பண்புகளை கொண்டுள்ளதால் பெருங்குடல் வளர்ச்சி புற்றுத்தொற்று உள்ளிட்ட அபாயங்களை குறைக்கும். வயதாகும் போது ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்புகளில் துளை ஏற்படுவது ஆகியவை தடுக்க தினசரி திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
இந்த கருப்பு திராட்சை உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் சி கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது.