
வாழை இலையில் சாப்பிடுவது என்றால் பலருக்கும் மிகவும் விருப்பமான ஒன்று இதில் சாப்பிடும் பொழுது உணவின் சுவை மேம்படும். பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது பேப்பர் இலையில் வைத்து சாப்பிடுவதைவிட இது மிகவும் ஆரோக்கியமானதாகவும் கூட இருக்கும் அந்த வகையில் வாழை இலையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்…
வாழை இலையில் ஃபிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் இருக்கும் ப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராட உதவுகிறது இதன் மூலம் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியை இது தடுத்து புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது, வாழை இலையில் ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆக்சனேற்ற பண்புகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் இதில் இருக்கும் நற்பண்புகள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டினை மேம்படுத்தும் என்று ஆய்வின் முடிவில் தெரிகிறது, வாழை இலையில் இருக்கும் இயற்கையான சேர்மங்கள் செரிமானத்தினை மேம்படுத்து உதவுகிறது அஜீரணம் வீக்கம் உள்ளிட்ட இரைப்பை குடல் கோளாறுகளையும் இது குணப்படுத்துகிறது உணவில் இருக்கும் ஊட்டச்சத்தினை உறிஞ்சியும் இது உதவுகிறது, வாழை இலையில் காணப்படும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அலர்ஜி எதிர்ப்பு கலவைகள் உள்ளிட்டவை உடலில் இருக்கும் இயற்கையான நச்சு நீக்கத்தை மேம்படுத்துகிறது இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு வீக்கம் குறையும், வாழை இலையில் இருக்கும் புரதம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் குலோஜன் உற்பத்தியினை அதிகரிக்கிறது இதன் மூலம் தோலின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரிப்பதோடு சுருக்கம் ஏற்படுவதையும் தடுக்க முடிகிறது இதன் சாறு கொண்ட கிரீம்கள் பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் குறையும், வாழை இலையில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சிலருக்கு இதன் சேர்மங்கள் ஒவ்வாமை ஏற்படுத்தலாம். அரிப்பு தோல் சிவத்தால் அலர்ஜி உள்ளிட்ட தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும். வாய்ப்புகள் உள்ளது, ஒரு சிலருக்கு வாழை இலைகள் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது அதனால் அத்தகைய உடல்நிலை உள்ளவர்கள் வாழை இலையை சமையலுக்கு பயன்படுத்துகையில் சற்று கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது குறைந்த அளவில் முதலில் சாப்பிட்டு பார்த்து எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் மேற்கொண்டு அதில் சாப்பிடலாம்..!!