இன்றைய காலகட்டத்தில் தலைவலி காய்ச்சல் போல் பல பேருக்கு புற்றுநோய் இருக்கிறது. எல்லா இடத்திலும் புற்றுநோய் பரவி விட்டது. என்ன தான் புற்றுநோய்க்கு பலவிதமான சிகிச்சை இருந்தாலும் அது ஒரு உயிர் கொல்லி நோய் தான். அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் வருமுன் காப்பது நன்று என்பது போல் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி எதிர்ப்பு சக்தியை தூண்டும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.
முறையான வாழ்க்கை முறை இருந்தால் எந்த ஒரு நோயும் நம்மை அண்டாது. ஒரு சில வாழ்க்கை முறை பழக்கங்களை மாற்றுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் மது அருந்துதலும் கூடாது.
ஆரோக்கியமான எடையை பராமரித்தல், பதப்படுத்த உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது, முறையாக உடற்பயிற்சி செய்தல், சரியான ஊட்டச்சத்துடன் உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை கடைபிடிப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
புற்றுநோய் வராமல் தடுப்பதில் உணவுகளின் பங்கு மிக முக்கியமானது. 40% புற்று நோய்களை உடல் செயல்பாடுகளுடன் ஊட்டச்சத்துடன் கூடிய சரியான உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் தடுக்க முடியும். பருப்பு வகைகள், பாதாம், வேர்க்கடலை வால்நட், பட்டாணி, பீன்ஸ் போன்றவை மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்கடல் புற்று நோயை குறைக்க உதவுகின்றன.
ஆலிவ் எண்ணெய், கோதுமை ஓட்ஸ், கம்பு, தினை, மக்காச்சோளம், தக்காளி, பெர்ரி, பிரக்கோலி, பூண்டு, மஞ்சள், சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய் போன்றவை புற்றுநோய் தடுப்பதற்கான காரணிகள் அதிகமாக இருக்கின்றன.
கிரீன் டீ, பிளாக் டீ, கொழுப்பு நிறைந்த மீன், ஆளி விதை போன்றவைகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் லிங்கனான்கள் நிறைந்துள்ளன. இந்த உணவுகள் எல்லாம் எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோய் வராமல் முன்னரே நம்மால் தடுக்க இயலும்.




