புற்று நோயை விரட்டும் பழைய சாதம்..!! ஆய்வில் வெளிவந்த உண்மை..!!

பழங்காலத்தில் பலருடைய முக்கிய உணவாக இருந்து வந்தது பழைய சாதம்தான். அதற்கு பச்சை மிளகாயை இணை உளவாக வைத்து சாப்பிடுவார்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த பழைய சாதம் சாப்பிடுவதால் புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்டது என கூறப்படுகிறது .

பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் காலை உணவாக பலரும் தோசை, இட்லி ,வடை, பொங்கல் போன்றவற்றை உண்ணுகின்றனர். ஆனால் இந்த பழைய சாதத்தில் நொதித்த அரிசி கஞ்சி தண்ணீரில் உயிரி மூலக்கூறுகள் அதிக அளவில் இருப்பதால் உடல் செல்களில் எதிர்ப்பு தன்மையை இது அதிகரிக்கின்றது. எனவேதான் காலை உணவில் பழைய சோறை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழைய சாதத்தில் உள்ள நுண்ணுயிரிகள் உடல் சுகாதாரத்தை இணைக்கிறது. இது பாரம்பரிய உணவாகவும் பார்க்கப்படுகிறது.

வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பழைய சாதத்தை தற்போதைய காலகட்டத்தில் அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது. இதன் மூலம் வெளியாகிய வளர்ச்சிதை மாற்ற வேதிப்பொருள்கள் ஆனது குடலில் உள்ள செல்களை வலிமைப்படுத்தி நம் உடல் ஆரோக்கியம் மேம்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக குடலில் அப்பழுக்குகள் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதால் இது புற்றுநோய் பாதிப்பிலிருந்து நம்மை தடுக்கின்றது. அது மட்டுமல்லாமல் பழைய சாதத்தில் நன்மைகளை அதிகரிக்க அரிசி சாதத்தை வடித்த பின்னர் அதன் அதை மண்பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சாப்பிடுவது அதிகப்படியான நன்மைகளை உடலுக்கு தரும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Read Previous

ஓரினசேர்கைக்கு எதிராக செயல்பட்ட தந்தை எரித்துக்கொலை..!! மகன் வெறிச்செயல்..!!

Read Next

சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை..!! எங்கு தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular