
சமீபத்தில் பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நெஞ்சு வலி காரணமாக செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சை செய்த பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு சென்றுள்ளனர். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியுடன் அவரது வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் புழல் சிறைக்கு விரைந்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.