
சென்னை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பூ புழல் பெண்கள் ஜெயிலில் பெண் கைதிகளை பராமரிப்பதை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அங்கிருந்த பெண்கள் குஷ்பூவை பார்த்ததும் ஆர்வத்துடன் அவரை சந்தித்து பேசினர், பெண் கைதிகள் தயாரித்த பொருட்களை பார்வையிட்ட குஷ்பூ அவர்களை பாராட்டி சிறையில் விசாரணை கைதிகளாகவும் தண்டனை பெற்ற கைதிகளாகவும் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்ககை அளிக்கும் வகையில் ஆறுதல் கூறியுள்ளார்.
பிரச்சனைகளை சந்திப்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது ஆகிவிடும் அதையும் கடந்து துணிச்சலுடன் வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெண் கைதிகளுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து நடிகர் குஷ்பூ தெரிவிக்கையில் “மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற வகையில் சிறையில் உள்ள பெண்களை நடத்தப்படும் விதம் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள நேரில் சென்று பார்த்தேன் நான் எதிர்பார்க்காத வகையில் கைதிகள் சிறையை சுத்தமாக வைத்துள்ளனர்.
அவர்களை நல்ல முறையில் பராமரிப்பதாகவும் தெரிவித்துள்ள கைதிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது பற்றி ஜெயிலருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளை நன்கு கவனித்து பொருளாதார ரீதியாக அவர்களின் பாதுகாப்புக்கு உதவக்கூடியதை கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றது. மேலும் அதை எவ்வாறு சிறப்பாக செய்வது என்பதை பற்றி எனது எண்ணங்களையும் யோசனைகளையும் பகிர்ந்து வந்துள்ளேன்” என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.