
நம்மில் பலரும் நமக்கு காய்ச்சல் ஏற்படும்போது நார்மலாக தினமும் சாப்பிடும் உணவை நமக்கு சாப்பிட தோணாது. வாய் கசப்பு ஏற்படும் அப்போது கஞ்சி போன்றவற்றை தான் நாம் உண்ணுவதற்கு விரும்புவோம். அந்த வகையில் காச்சல் இருப்பவர்களுக்கு எந்த மாதிரி கஞ்சி செஞ்சு கொடுக்க வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். காய்ச்சல் உள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி கஞ்சி இந்த மாதிரி செஞ்சு கொடுங்க.
காய்ச்சலுக்கு ஏற்ற புழுங்கல் அரிசி கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – அரை கப்
பூண்டு – 10 பல் இடித்துக் கொள்ளவும்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
காய்ச்சலுக்கு ஏற்ற புழுங்கல் அரிசி கஞ்சி எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒரு கப் அரிசிக்கு நாலு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.அரிசியையும் பருப்பையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு தடவை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
குக்கரில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதித்த உடன் ஊற வைத்திருந்த அரிசி பருப்பு அதில் சேர்க்க வேண்டும்.ஐந்து நிமிடம் கொதிக்க விடவும் பின் அதில் இடித்த பூண்டு சீரகம் உப்பு சேர்த்து கலந்து விட்டுகுக்கர் லிட் க்ளோஸ் செய்து நாலு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.சூடாக புழுங்கல் அரிசி கஞ்சி ரெடி. இப்போது இதை ஒரு கப்பில் சேர்த்து காய்ச்சல் உள்ளவர்களுக்கு பரிமாறினால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.