இந்த நவீன காலகட்டத்தில் நாம் எங்கு வேலைக்கு சென்றாலும் இறுதியில் நம் வீட்டில் வந்து தூங்கத்தான் அனைவரும் நினைப்போம். நம் வீடு என்பது ஒரு அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் எங்கு நாம் வேலை சென்று மன உளைச்சலுக்கு ஆளானாலும் இறுதியில் நம் வீட்டிற்கு வந்தால் தான் நமக்கு மன நிம்மதி கிடைக்கும். இவ்வாறு இருக்கும் வீட்டில் சிலருக்கு தேவையில்லாத விரத செலவுகள் ஏற்பட்டு பணம் பற்றாக்குறை ஏற்படும் சிலருக்கு கடன்கள் கூட ஏற்படும் சிலருக்கு அந்த கடன்கள் அதிகமாக கூட கூடும் இதற்கு காரணம் என்னவென்றால் வாஸ்து பார்க்காமல் சரியாக வீடு கட்டாதது தான். வாஸ்துபடி அந்தந்த பொருட்கள் அந்தந்த இடத்திலும் இந்த இடத்தில் தான் சமையல் ரூம் இருக்க வேண்டும் வாசப்படி அப்படியெல்லாம் வாஸ்து படி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீட்டில் வாஸ்துபடி பூஜை அறையில் பணம் வைக்கலாமா வைக்க கூடாதா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து படி பணத்தை வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும். வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் கிழக்கு திசையை நோக்கி கூட வைக்கலாம். வாஸ்துபடி கிழக்கு மற்றும் வடக்கு இந்த இரு திசைகளும் செல்வம் பெருகுவதற்கான விசையாகவும் பணத்தை வைப்பதற்கான திசையாகவும் கருதப்படுகிறது. மேலும் பூஜை அறையில் பணம் வைக்கக் கூடாது. பணம் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்க வேண்டும். இதையெல்லாம் கடைபிடித்தாலே போதும் செல்வம் பெருகும்.