பூண்டு திருடியதால் பயங்கரம்..!! தொழிலாளியை அடித்தே கொலை செய்த மளிகைக்கடை உரிமையாளர்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போரி வலி  பகுதியை சார்ந்தவர் கன்ஷ்யாம் அகாரி (வயது 56). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார், இவர் நிறுவனத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பங்கஜ் மண்டல் என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இவர் அவ்வப்போது   மளிகை கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சிறு சிறு மளிகை சாமான்களான வெங்காயம், பூண்டு பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த உரிமையாளர் பங்கச்ஜை கண்டித்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 20 கிலோ பூண்டு மூட்டையை கடையிலிருந்து திருட முயற்சித்த போது கடையின் உரிமையாளர் கன்சியாவிடம், பங்கஜ் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த கன்ஷ்யாம் ஊழியர் பங்கஜை கொடூரமாய் கொலை செய்தார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் பங்கஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் கைது செய்துள்ளனர் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

அதிர்ச்சி.. வகுப்பறையில் 3 ஆசிரியைகளுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்த ஆசிரியர்..!! ஆபாச தளத்தில் வீடியோ பதிவேற்றப்பட்டதால் பரபரப்பு..!!

Read Next

நீங்கள் கேக் பிரியரா? இதை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular