பூண்டு தோசை செய்வது எப்படி..!! வாங்க பார்க்கலாம்..!!

பூண்டு தோசை சாப்பிட்டு இருக்கீங்களா. வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தோசை எப்பொழுதும் போல சாதாரணமாக சாப்பிடுவதை விட்டு விட்டு இன்று சற்று வித்தியாசமாக அட்டகாசமான சுவை கொண்ட பூண்டு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  1. பூண்டு
  2. வர மிளகாய்
  3. தக்காளி
  4. வெங்காயம்
  5. உப்பு
  6. தோசை மாவு
  7. எண்ணெய்

செய்முறை: முதலில் தோசை மாவை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின் தக்காளி வரமிளகாய் வெங்காயம் உப்பு மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்பதாக மிக்சியில் அவற்றை போட்டு நன்கு பேஸ்ட் போல அரைத்து வைத்து கொள்ளவும்.பின் இவற்றை நாம் எடுத்து வைத்து உள்ள தோசை மாவில் கலந்து தோசை கல் மிதமாக சூடேறியதும் மெல்லிதாக மாவை ஊற்றி சுட்டு எடுத்தால் அட்டகாசமான பூண்டு தோசை தயாராகி விட்டது.

Read Previous

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.44 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள்..!! ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்..!!

Read Next

ராஜபாளையம் அருகே கடன் பிரச்சினையில் டீக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திக் படுகொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular