பூப்புனித நீராடல் விழா என்பது தன்னை அடுத்த நிலைக்கு தயாராகிக்கொள்ள பெண்ணுக்கு புரிய வைக்க அடுத்தவரிடம் இருந்து தள்ளி நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன்.
குழந்தை தனத்திலிருந்து விடுபட்டு அடுத்த நிலைக்கு செல்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே என்பதும் அந்த காலத்தில் இப்போது உள்ள நடைமுறைகள் இல்லை என்பதால் என் வீட்டில் மகள் பெரியவளாகி விட்டாள் என்றால் அண்டை அடுத்தவர் தன் வீட்டிற்குள்ளே வராமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கைக்கு ஆகவே இது அன்று அனைவருக்கும் உணர்த்தவே நடத்தப்பட்டது .
அந்த காலகட்டத்தின் முறைப்படி இது ஒன்றும் தவறு இல்லை. படிப்பு என்பதை தவிர்த்து அன்றைய குழந்தைகள் எல்லாவற்றிலும் வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து அறிந்தே வாழ்ந்திருக்கிறார்கள்.
அந்த நிலைக்கு தயார் செய்வதற்காகவே அவர்களுக்கு புரிய வைப்பதற்காகவே இந்த விழாக்களும் தன் தாய் மாமன் வீட்டு சீர்கள் அத்தை விட்டு சீர்கள் உறவு முறைகளில் செய்முறைகள் என்று உறவுகளை விட்டுப் போகச் செய்யாமல் அந்த வரவுகளை மீண்டும் சரி செய்யவும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன நடத்தப்படுகின்றன
. தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு மிகப்பெரிய பொருள் புரிந்த தன்மை இருக்கும் என்பதே உண்மை
இந்த சடங்கு வெறும் சடங்கு இல்லை நம் ஆதி வரலாறு, ஆதி காலத்தில் காடுகளில் வசித்து வந்த காலம் ஒரு பெண் பூ பெய்தவுடன் அந்த பெண் கூட்டுமாக வாழும் மக்களிடம் இருந்து தனிமை படுத்தப்படுவாள் காரணம் அந்த பெண் உடல் சோர்வுடன் காணப்படுவாள்,
எனவே அந்த பெண்ணை காடுகளில் உள்ள ஓலைகளை வைத்து குச்சி கட்டி அதில் அந்த பெண்ணை பாதுகாப்பார்கள்,
இந்த வழக்கம் தான் இன்று வரை கிராமங்கலில் குச்சி கட்டி பெண்ணை உட்கார வைக்கும் வழக்கம்,கூடவே அந்த பெண் முன்னாடி உலக்கையையும் போடுவார்கள்,பூ பெய்தபோது ஏற்படும் ரத்த போக்கு, காடுகளில் உள்ள மிருகங்கள் வாடை நுகர்ந்து வராமல் இருக்க, பாதுக்காக்க அந்த பெண்ணிர்க்கான ஆயுதம் கம்பு,அதைத்தான் அந்த பெண் முன்னாடி வைக்கிறார்கள்,
அதுதான் காலப்போக்கில் உலக்கை ஆகியது,
பின் பெண்ணிடம் ஏற்படும் உடல் மாற்றம், ரத்தபோக்கு, கிருமிதோற்று போன்றவற்றில் இருந்து காக்க அந்த பெண்ணை குழுப்பாட்டுவார்கள் இதான் தண்ணியூத்து சடங்கு,, மஞ்சள் பூசுவார்கள், மஞ்சள் மிக அருமையான கிருமிநாசினி, குழவை இடுவார்கள் இதான் ஆதி பலங்குடியினர் இன்றளவும் இடும் குழவைசத்தம்,, எல்லாம் காரண காரியமே, ஒன்றே ஒன்றுதான் சொல்வேன், தமிழர் வாழ்வியல் காரண காரிய துடன் பிணக்க பட்டது, அடிமைத்தனம் எது மூட நம்பிக்கை எது என்று ஆராயிந்து நாம் தான் நம் வரலாற்றை காக்க வேண்டும்..




