பூரி மசாலா இப்படி செஞ்சு பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..??
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானா பிறகு அதில் சிறிதளவு கடுகு மற்றும் பச்சை கடலை பருப்பு சேர்த்து நன்றாக பொரிந்த பிறகு தேவையான அளவு கருவேப்பிலை மற்றும் நான்கு பச்சை மிளகாய் பொடியாக கட் பண்ணது சேர்த்துக் கொள்ளவும். பிறகு இரண்டு பெரிய வெங்காயம் சின்ன சின்னதாக நீட்டவாக்கில் கட் பண்ணி சேர்த்துக் கொள்ளவும். சிறிய அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து அதில் உள்ள தோலை நீக்கி உருளைக்கிழங்கை பாதி மசித்தும் பாதி சின்ன சின்னதாக கட் பண்ணியும் சேர்த்து நன்றாக வதக்கி ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் செய்தால் சுவையான பூரி மசாலா தயார்.