பூர்வகுடிகளின் வீடுகளை சூறையாடி மீட்கப்படும் வனத்துறை நிலங்கள்..!! தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்.!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம், பாலக்காடு வனசாரகத்தில் குடியிருந்து வரும் மீனவர்கள், பூர்வ குடிகள், விவசாயிகள் ஆகியோரை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது.

வனத்துறையினர் சார்பில் அங்குள்ள பல பகுதிகளில் குடியிருந்து வரும் நபர்களை ஆக்கிரமிப்பு அகற்றுவதாக மக்களை வெளியேற்றும் பணியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மணல்திட்டு பகுதியில் வசித்து வந்த குடியிருப்பினை வனத்துறை அதிகாரிகள் அகற்ற முயற்சி செய்தனர். அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடினர்.அப்பொது அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள் சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

பின் அதிகாரிகள் அங்கிருந்து செல்ல பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குடியிருப்பில்   இருந்தவர்கள் வீட்டில் இல்லாததை அறிந்து கொண்ட வனத்துறையினர் இரவோடு இரவாக சென்று வீடுகளை சூறையாடி இடித்து தள்ளி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்திகள் வெளியான நிலையில் வனத்துறை அதிகாரிகள் தற்பொழுது சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்,

அதாவது வனங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. ஐந்து தலைமுறைக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வந்த பூர்வ குடி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் கூட கொடுக்காமல் அதிகாரிகள் வீடுகளை சூறையாடி இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Read Previous

பெண் உதவியுடன் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! கட்டிப்போட்டு தப்பியோடிய காமுகன்கள்.!!

Read Next

பிளவுபடுகிறது அதிமுக? பாஜகவின் மாஸ்டர் பிளான் என்ன? – சட்டத்துறை அமைச்சரின் பகீர் தகவல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular