பூ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை..!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மணிகண்டன்(வயது 41). இவர் பூக்கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சினையால் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் முந்திரிக்கு அடிக்க வைத்து இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

ரயிலில் முதியவர் அடிப்பட்டு உயிரிழப்பு..!!

Read Next

ஏரியில் ஆண் சடலம்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular