பெங்களூரு vs டெல்லி | IPL 2024: டெல்லி கேப்டனாக அக்சர் படேல்..!!

ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்கிறது.

இந்நிலையில் டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது. இந்த முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2 முறை மெதுவாக பந்து வீசியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த இந்நிலையில் 3-வது முறையாக இந்த போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

ரிஷப் பந்த் ஒரு போட்டியில் தவறவிட்டதால், அக்சர் படேல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதாக டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆர்சிபிக்கு எதிரான நாளைய போட்டியில் அக்சர் அணியை வழிநடத்துவார் எனத் தெரியவந்துள்ளது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ரிஷப் ரிஷப் பந்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்க ஐபிஎல் ஆட்சிக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள போட்டி, பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க – காரமும், சுவையும் நிறைந்த சிக்கன் பூனா..!! வட இந்தியாவின் முக்கிய அசைவ உணவு..!!

Read Previous

காரமும், சுவையும் நிறைந்த சிக்கன் பூனா..!! வட இந்தியாவின் முக்கிய அசைவ உணவு..!!

Read Next

எதிர்மறை ஆற்றல் அகல, குடும்ப பிரச்சனை இவற்றிக்கு தீர்வு தரும் மிளகாய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular