பெண்களின் தலையாய பிரச்சினைகளா இருக்கும் நீர்க்கட்டி பிரச்சனையை குணம் செய்யும் வழிகள்..!!

பெண்களின் உடலில் கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சினைப்பையில் இருந்து சினை முட்டைகள் வெளிவராத காரணத்தால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர் கட்டிகள் உருவாகின்றது.

இந்த நீர்க்கட்டிகள் உருவானால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயமும் ஏற்படும். இதற்கு உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இவ்வாறு பெண்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும் இந்த நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும்.

  1.  கழற்சிக்காயின் உள்ளிருக்கும் பருப்புடன் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டு வர நீர்க்கட்டி பிரச்சனை குணமடையும்.
  2. பச்சிலை இலையை அரைத்து மோரில் கலந்து அருந்தி வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை குணமடையும்.
  3. வெந்தயம் ஒரு ஸ்பூன் அளவு நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி கரைந்து விடும்.
  4. இலவங்கப்பட்டையை அரைத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் நீர்க்கட்டி பிரச்சனை தீரும்.
  5. ஆளி விதை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பாதிப்பு குணமடையும்.
  6. அம்மான் பச்சரிசி இலையை உணர்த்தி பொடி ஆக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நீர்க்கட்டி எளிதில் கரைந்து விடும்.
  7. மலைவேம்பை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி காலை நேரத்தில் சாப்பிட்டு வர நீர்க்கட்டி பாதிப்பு குணமாகும்.

Read Previous

தென்னந்தோப்பில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம்: தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

Read Next

பாடாய்படுத்து மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? இரவு தூங்கும் செல்லும் முன் இந்த மூலிகை எண்ணெயை தடவி பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular