பெண்களின் தியாகத்தை கதை கதையாக படிச்சிருப்போம் ஆனால் ஆண்களின் தியாகம் ஒரு சொல்லப்படாத கதை.
ஒரு ஆணுக்கு அவனுடைய திருமணத்திற்கு முன்பு இருக்கும் ஒரு மிக பெரிய லட்சியம் என்ன தெரியுமா..
நல்ல வேலைக்கு போய் நல்லா சம்பாதித்து தன்னுடைய அம்மாவிற்கு ஒரு ஆடை வாங்கி தர வேண்டும் என்பதே.
இனி நான் சம்பாதிக்கிறேன் நீங்க ஓய்வெடுங்கன்னு தன் தந்தையிடம் சொல்ல வேண்டும் என்பதே.
திருமணத்திற்கு பிறகு குழந்தை கேட்கும் ஒரு சின்ன பொருளை வாங்கி குடுக்க முடியவில்லை என்றாலும் அவன் மனம் வாடி விடும் அதற்காகவே தான் கடுமையாக உழைப்பான் அவர்கள் கேட்பதை வாங்கி தரும் அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, குழந்தையின் முகத்தில், மனைவியின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்பதற்காக அதுவே அவனுக்கு மனநிறைவு தரும்.
ஆண்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நேரம் ரொம்ப குறைவு.
ஆண்கள் ஏன் அவர்களுக்காக எதுவும் செய்து கொள்வதில்லை, மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கி கொள்வதில்லை….
அதுவெல்லாம் ஆண்களுக்கு மகிழ்ச்சி தருவதில்லை குடும்பத்தில் இருப்பவர்களின் முகமலர்ச்சியே அவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.
அப்படி இருக்கும் ஆண்களுக்கு ஒரு மகளாக, ஒரு மனைவியாக, ஒரு தங்கையாக நாம் தான் வாங்கி தர வேண்டும் அவர்கள் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும்.
ஏன்னா கடைசி வரைக்கும் அவங்க அவங்களுக்காக எதுவுமே செஞ்சிக்க மாட்டாங்க குடும்பத்துக்காகவே ஓடாக உழைத்து தேய்ந்து போவார்கள்.
அது ஆண்கள் வாங்கி வந்த வரம்..