
பெண்களின் மனநிலை..
அவளுக்கு அன்று இலேசாக தலைசுற்றியது. தலைசாய்த்து ஓய்ந்து படுக்கமுடியவில்லை அவளுக்காய் ஓயாத வேலைகள் காத்திருந்தது.
காலை உணவு செய்ய மாவை பிசைந்தாள். அவளது உள்ளுணர்வு
அருவருப்பின் உச்சத்தில் சென்றது. அடிவயிற்றில் லேசான வலி அவளுக்கு மட்டும் புரிந்தது.
மனதைக்கல்லாக்கி கட்டிலில் தேநீருக்காய் கத்திக்கொண்டிருந்த கணவனுக்கு தேநீர் கொடுத்து, வாசல்படிதிரும்ப கிணற்றடியில் குளியலுக்காய் காத்திருந்த மகள் சத்தமிட பதறி ஓடியவள் படியிலே #கால்தடக்கி பெருவிரலில் அடிபட்டு குருதி வெளியேறியது.
மகளைக்குளிப்பாட்டி முடிய, வேலைக்கு தயாரான கணவன் சத்தமிட காலை உணவுக்காய் பிசைந்த மாவில் சப்பாத்தி செய்து பார்சல் கட்ட, சப்பாத்திதான் ஒவ்வொரு நாளும் உணவா….!!! என மனம் வெறுக்க கத்திக்கொண்டு, வெளியேற நேரம் எட்டைத்தாண்டிட்டு. இலேசாக அடிவயிறு நோக நடந்து பள்ளியில் மகளைச்சேர்த்து, சந்தைக்கு போய் மரக்கறி கடை அலைந்து வீடு வர நேரம் பன்னிரண்டைத்தாண்டியது.
மதியம் சமையல் தொடங்கி சகல வேலையும் செய்து இயந்திரமாய் அலைந்து இரவில் இமை தூங்க தயாராகி சாய்ந்தாள்……..!!
இதயம் கெட்ட கணவன் காமத்தின் உணர்வில் அவள் மாதவிடாய் எனத்தெரிந்தும் அடங்காத காமவிடாயில் மடிசாய பலி ஆடாய் அவள் மனம் பரிதவித்து வலியோடு கண்ணீர் மட்டும் தலையணையை நனைத்தது.
27 நாட்கள் இயந்திரமாய் தாயாய், தாரமாய் , வேலைக்காரியாய் பல வேடம் ஏற்று வேதனைப்படும் பெண்மைக்கு ஆண்மையே உன்னால் முடிந்த சிறு உதவிகள் செய்துகொடு முடியவில்லையா…..??? குறைந்தது அந்த 03 நாட்கள் மட்டுமாவது பெண்மை உன் மடியில் #தூங்க நீ தாயாகி கடமை ஏற்று அவள் உடல் உள்ளம் அறிந்து உதவி செய் ஏன் எனில் அவள் உலகமாய் உனை நம்பி வந்தவள்..