தேவையான பொருள்: பால் 150 மி.லி பேரீச்சை பழம் 7 எண்ணிக்கை நாட்டு சர்க்கரை தேவையான அளவு செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு பேரீச்சை பழம் விதைகளை நீக்கி பாலுடன் சேர்த்துக்கொள்ளவும். மேலும் இதனை 15 நிமிடம் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். பிறகு பாலை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இப்போது சுவையான மருத்துவ குணமிக்க பால் தயார் ஆகிவிடும். இதனை தொடர்ந்து ஒரு வேளை குடித்து வர பெண்களின் முதுகு வலி முற்றிலுமாக குணமாகும்.