பெண்களுக்கு குறிப்பாக வயது அதிகமானதாலும் சிலருக்கு கர்பம் அடைவது கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தும். சொல்லப் போனால் 20-லிருந்து 29 வயது வரை பெண்கள் குழந்தை வரம் பெறுவதில் சிரமம் ஏதுமில்லை.
30 லிருந்து 34 வரை பெண்களுக்கு 69 விழுக்காடு வாய்ப்புள்ளது. அதே 35 லிருந்து 39 வயது வரை உள்ள பெண்களுக்கு ஐம்மது விழுக்காடே வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அதற்காக யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. பெண்கள் கருத்தரிக்க சரியான வயது என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம். அதனோடு முறையாக மருத்துவரை அணுகி மருந்துகளை சரிவர எடுத்து வர நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
இதில் சிறு வயது(21) பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவசரப்படாமல் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை காத்திருக்கலாம். அதற்கு மேற்பட்டும் சரிவரவில்லை என்றால் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைபடி நடந்து கொள்ளலாம்.