பெண்களுக்கான கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் வழிமுறைகள்..!!

வைட்டமின்கள்

பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது வைட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் வைட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்ப்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படிக் குடிப்பதனால் உடலில் இன்ஸுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்ஸுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதே போல கெட்டக் கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெயை லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தித் துணியைக் கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் அப்படியில்லை என்னில் ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம். ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது. அதோடு உள்ளுருப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்படாது, இதனால் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.

கற்றாழை

கற்றாலை ஜூஸ் காலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வேண்டும். இதனை தினமும் கூட சாப்பிடலாம். கற்றாழையில் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கருப்பை இயங்குவதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது. மாதவிடாய் பிரச்சனையிருப்பவர்கள் இதனை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுத்திடும்.

வெந்தயம்

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.

Read Previous

நாக பஞ்சமி அன்று நாக தெய்வத்தை வணங்குவதால் நல்லது நடக்கும்..!!

Read Next

ஆதார் அப்டேட் செய்யணுமா?.. உடனே செல்லுங்கள்..!! கட்டணமாகும் ஆதார் அப்டேட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular