இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது அருந்துவதில் அடிமையாகி விட்டனர், இன்னும் சில இடங்களில் ஆண்களை காட்டிலும் பெண்களை மது அருந்துவதில் முதலிடத்தில் பெறுகின்றனர் ஆனால் மது அருந்ததினால் தீமைகள் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் என்று பெண்கள் அறிவதே இல்லை மதுவினால் ஆரம்பகட்டம் போதை மயக்கமாகும் காலப்போக்கில் அதுவே நோய்வாய் படுவதற்கான அறிகுறியாக மாறிவிடும்..
ஹேங் ஓவர் என்பது மது அருந்தும் ஆண் மற்றும் பெண்களுக்கான ஒரே மாதிரியான அறிகுறியாகவே தென்படும், ஆனால் மது அருந்தும் போது ஹேங் ஓவரில் பெண்கள் சற்று தனித்தே காணப்படுகின்றனர், ஆண்களுடலில் அதிகளவு நீர் இருப்பதால் அதனை ஈடுகட்ட உடலில் உள்ள செல்கள் எல்லாம் வேலை செய்கிறது ஆனால் பெண்களுக்கு சற்று குறைவுதான் பெண்கள் மது அருந்திய உடன் ரத்தத்தில் அதிவேகமாக கலந்து உடனே பெண்களை மயக்க நிலையில் தள்ளுகிறது இதனால் பெண்களுக்கு சுற்றி என நடக்கிறது என்று தெரிவது கடினம் தான், முடிந்தவரை குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவருவது நல்லது..!!