பெண்களுக்கு அந்த இடத்தில் அடிக்கடி ஏன் அரிப்பு ஏற்படுகிறது?.. எப்படி சரிசெய்யணும்?..

வெஜினிட்டீஸ் என்பது பெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் ஒருவித அழற்சி நோயாகும். இதில் நிறைய வகைகள் உள்ளன. பாக்டீரியல் வெஜினோஸிஸ், ஈஸ்ட் தொற்று, ட்ரைக்கோமோனியாஸிஸ், வெஜினல் ஆட்ரோஃபி. பெண்களின் யோனி பகுதியில் பாக்டீரியாக்களின் உற்பத்தி பெருகும் போது இந்த மாதிரியான அழற்சி ஏற்படுகிறது. மாதவிடாய் முடிந்த காலங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகும் போது இது ஏற்படுகிறது.

மேலும் வெஜினல் ஸ்பிரே, டவுச்சஸ், சோப்பு, நறுமணமிக்க டிடர்ஜெண்ட்கள், ஸ்பெர்மிசிடல் பொருட்கள் போன்றவை உள்ளன. இந்த பாக்டீரியா தொற்று டயாபெட்டீஸ், சில மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுதல், தண்ணீரை கொண்டு ஸ்ப்ரே செய்தல், சுத்தமில்லாமல் இருத்தல், ஈரமான அல்லது இறுக்கமான உள்ளாடைகள், இன்ட்ராயூட்ரைன் கருவி போன்றவற்றை பிறப்புக் கட்டுப்பாடுக்கு பயன்படுத்தலாம்.

அறிகுறிகள்

யோனி பகுதியில் அரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், துர்நாற்றம், வலி, எரிச்சல் மற்றும் சிறுநீர் போகும் போது கடுகடுத்தல், உடலுறுவின் போது சிரமம், இரத்தக் கசிவு மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் படுதல். இந்த அறிகுறிகளைக் கீழ்க்கண்ட வீட்டு முறைகளைக் கொண்டே சரி செய்து விடலாம்.

யோகார்ட்

புரோபயோடிக் உணவுகள் பிறப்புறுப்பு தொற்றை போக்க சிறந்த ஒன்று. ஏனெனில் இந்த யோகார்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசில்ஸ் யோனி பகுதியில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிக்கிறது. வெஜினா பகுதியில் உள்ள pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

டோம்பன் கருவி மூலம் வெஜினா பகுதியில் யோகார்ட்டை வையுங்கள். 2 மணி நேரம் வையுங்கள். இதை தினமும் இரண்டு தடவை செய்து வாருங்கள்.

அதே மாதிரி யோகார்ட்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர் உங்கள் யோனி பகுதியில் உள்ள pHஅளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இந்த சமநிலை pH அளவு நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் உற்பத்தியை சமநிலையில் வைக்கிறது.

பயன்படுத்தும் முறை

2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். இதைக் கொண்டு உங்கள் அந்தரங்க பகுதியை சில நாட்கள் சுத்தம் செய்து வாருங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1-2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர், கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை தினமும் இரண்டு முறை குடித்து வாருங்கள்.

ஐஸ் ஒத்தடம்

அந்தரங்க பகுதியில் இருக்கும் அழற்சியை போக்க ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த வெப்பநிலை அந்த பகுதியில் உணர்வை இழக்கவும், அரிப்பை போக்கவும், வலியை போக்கவும் பயன்படுகிறது. சில ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டிக் கொள்ளுங்கள்.

இதை 1 நிமிடங்கள் அந்தரங்க பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுங்கள்.

1 நிமிடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் அப்ளே செய்யுங்கள்.

இப்படியே சில நிமிடங்கள் செய்து வாருங்கள்.

இதை உங்கள் தேவைக்கேற்ப செய்து வாருங்கள்.

குளிர்ந்த நீரைக் கொண்டு கூட அந்தரங்க பகுதியை சுத்தம் செய்து வரலாம்

Read Previous

சாதத்திற்கு அருமையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி?..

Read Next

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular