
பெண்களுக்கு சில ஆன்மீக குறிப்புகள்..!! கண்டிப்பாக இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்..!!
பெண்கள் ஆன்மீக சம்பந்தமான குறிப்புகளை தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த பதிவை படிக்க வேண்டும். பெண்கள் தாலிக்கயிறு மாற்றும் போது வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி ஊதுபத்தி காட்டி கடவுளை நன்றாக வணங்கி விட்டு பிறகு பூஜை அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு மாங்கல்யம் மாற்ற வேண்டும். கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
மற்றும் பெண்கள் தாளிக்கயிறு மாற்றும் போது புது தாலி கயிறு கழுத்தில் போட்டுக்கொண்டு பழைய தாலி கயிற்றை கழட்ட வேண்டும். கோயிலுக்கு செல்லும்போது கோவிலில் பூ கொடுத்தால் பெண்கள் அதை கண்களில் ஒட்டிக்கொண்டு பின்பு தான் தலையில் சூடிக்கொள்ள வேண்டும். மற்றும் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பொழுதும் பிற கோயில்களுக்கு செல்லும் பொழுதும் துளசி கொடுத்தால சிறிது துளசியை சாப்பிட்டுவிட்டு மீதமிருக்கும் துளசியை பர்சில் வைத்தால் பணம் பெருகும். பெண்கள் விரதம் இருக்கும் பொழுது டீ, காபிக்கு பதிலாக பால் மற்றும் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி விளக்கு ஏற்றும் பொழுது பெண்கள் ஒருபோதும் தலையை விரித்துப் போட்டவாறு விளக்கு ஏற்ற கூடாது. கண்டிப்பாக இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்.