
பெண்களுக்கு ஏற்படும் பீரியட்ஸ் வலியை குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய உணவு முறை குறித்து மருத்துவர் லாவண்யா விளக்கம் அளித்துள்ளார்…
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு பீரியட்ஸ் ஏற்படும் போது கர்ப்பப்பை சுருங்கி விரிவடையும் இந்த சுழற்சியின் போது வலி ஏற்படும் என மருத்துவர் லாவண்யா தெரிவித்துள்ளார். பெரும்பாலான நேரத்தில் இவை தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்…
ஆனால் சிலருக்கு இவை கடுமையாக இருக்கும் மேலும் கர்ப்பப்பைலும் இவை சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். சாதாரணமாக பீரியட்ஸ் தொடங்கிய முதல் நாளிலேயே இந்த வழி தொடங்கிவிடும் அடுத்த சில நாட்கள் இவை குறைய தொடங்கும் அந்த வகையில் இந்த வழி தாங்கிக் கொள்ளக்கூடிய ரீதியில் இருந்தால் அப்பெண் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். இரண்டாவது கட்டத்தில் கர்ப்பப்பையில் சதை வளர்தல் கிருமி தொற்று போன்றவற்றால் வலி சிலருக்கு கடுமையாக இருக்கும் இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பீரியட்ஸ் தொடங்குவதற்கு ஒரு வார்த்தைக்கு முன்னதாகவே வலி ஏற்படும் பீரியட்ஸ் நின்ற பின்னரும் ஒரு வாரத்திற்கு இந்த வழி இருக்கக்கூடும் எனவே இந்த பிரச்சனைகள் இருந்தால் அவற்றை கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்…
வாந்தி மயக்கம் கால் வலி வயிற்றுப்போக்கு போன்றவை இதற்கான அறிகுறியாக இருக்கும் அதன்படி பீரியட்ஸ் நேரத்தில் சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டும் சில வகை உணவுகளாக இருப்பது டீ காபி இவைதான் அதேபோல் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவு வகைகளில் வெள்ளரிக்காய் தர்பூசணி போன்ற நீர் சத்தம் மிகவும் பொருட்களை சாப்பிடலாம் அதேபோல பப்பாளி கீரை வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம். பீரியட்ஸ் நேரத்தில் சீரகத் தண்ணீர் குடிக்கலாம் அதிக உப்பு சர்க்கரை எண்ணெய் காரம் இவை உடலில் இருக்கும் நீர்ச்சத்தை குறைத்து விடக்கூடும்..!!